கதை:சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கதை போட்டி.
முதல் பரிசு ரூபாய் 5.000
இரண்டாம் பரிசு ரூபாய் 3,000
மூன்றாம் பரிசு ரூபாய் 2,000
பரிசுத்தொகை தவிர சிறந்த முதல் பரிசு பெறும் கதை நேசம் சார்பில் குறும்படமாக எடுக்கப்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு கதையை அமைக்கவும்.
1.கதை எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும், மிக இயல்பாக இருக்க வேண்டும்.
2. மிகச்சிறந்த கதை குறும்படமாக எடுக்கப்படும், அந்த கதைக்கு உரியவருடைய திறமையை பொறுத்து அந்த படத்தில் அவர் விரும்பினால் பங்கு பெறலாம்.
3. தேர்ந்தெடுக்கப்படும் முதல் கதையின் குறும்பட உரிமை நேசம் அமைப்பை சேரும்.
4.நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.
கட்டுரை : சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு கட்டுரை போட்டி
முதல் பரிசு ரூபாய் 5000
இரண்டாம் பரிசு ரூபாய் 3000
மூன்றாம் பரிசு ரூபாய் 2000
பரிசுத்தொகை தவிர மிகச்சிறந்த கட்டுரை நேசம் சார்பில் ஆவணப்படமாக தயாரிக்கப்படும்.
விதிமுறைகள்:
கட்டுரை, மிக எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில், அதனுடன் தொடர்புடைய சுட்டிகள் அல்லது புத்தங்களின் விவரங்களுடன் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முதல் கட்டுரையின் ஆவணப்பட உரிமை நேசம் அமைப்பை சார்ந்தது.
நேசம் அமைப்பின் முடிவே இறுதியானது.
சிறந்த புற்றுநோய் விழிப்புணர்வு குறும்படம் போட்டி
முதல் பரிசு ரூபாய் 10,000
இரண்டாம் பரிசு ரூபாய் 7,500
மூன்றாம் பரிசு ரூபாய் 5,000
விதிமுறைகள்
குறும்படம் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
எந்த ஒரு தவறான கருத்துக்களும், அறிவுரைகளும், மிகைப்படுத்தலும், மற்றவரை காயப்படுத்துதலும் இல்லாமல். எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்காமலும் பயமுறுத்தாமலும் இருக்க வேண்டும்.
பரிசு பெறும் குறும்படம் தேவைப்படும் பொழுது எங்கும் எப்பொழுது வேண்டுமானாலும் திரையிடும் முழு உரிமை நேசம் அமைப்பை சாரும்.
நேசம் அமைப்பின் தீர்ப்பே இறுதியானது.
பொதுவானவை
1.கதைகள், கட்டுரைகள், குறும்படம் குறித்த உங்கள் படைப்புகளை சரியான தலைப்புகளின் கீழ் அனுப்பவும். யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மாணவர்கள் எனின் அவர்களுக்கு சிறப்பு பரிசும் உண்டு.
2. இந்த போட்டிகள் அனைத்தும் நேசம்அமைப்பு யுடான்ஸ் (http://udanz.com/ ) இணையதளத்துடன் சேர்ந்து நடத்துகிறது.
4.போட்டி முடிவுகள் பிஃப்ரவரி15 அல்லது 20 அன்று வெளியிடப்படும்.
5.அனைத்து படைப்புகளையும் nesamgroup@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
6.அத்துடன் யுடான்ஸ் இணையதளத்தில் நேசம் போட்டிகள் என்னும் வகையின் கீழ் உங்கள் படைப்புகளை இணைக்க வேண்டும்.
7.பதிவர்களின் வலைத்தளங்களின் யுடான்ஸ் ஓட்டு பட்டனை இணைக்க வேண்டும்.
8. படைப்புகள் அனைத்தும் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் அனுப்பவேண்டும்
9. உங்கள் படைப்புகளை உங்கள் தளங்களில் வெளியிடும் போது அதில் நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை என்று குறிப்பிட வேண்டும்.
10. குறும்படங்களை தளங்களில் வெளியிடக்கூடாது.
சிறந்த முதல் பத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படம் பள்ளி, கல்வி கூடங்களில், மருத்துவமனைமனைகள் போன்றவற்றிலும் மற்ற பொது நிகழ்வுகளிலும் முடிந்தவரை திரையிடப்படும்
இது ஒரு நூறு சதவித விழிப்புணர்வு நோக்கத்தில் ஏற்படுத்த பட்ட அமைப்பு, இதில் தன்னார்வ செயல்உறுப்பினர்கள் சேரலாம். வெறும் உறுப்பினராக இல்லாமல் நிஜமாகவே ஏதேனும் செய்ய விரும்புவர்கள் வரவேற்கபப்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புகளில் பங்கேற்க விரும்புவர்கள் nesamgroup@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
ஒரு சிறிய முயற்சியின் பின் துணை நிற்கும் அனைத்து நண்பர்களுக்கும் நேசம் கலந்த நன்றிகள்.
விழிப்புணர்வை ஏற்படுத்த நல்லதொரு முயற்சி. பங்களிப்புகள் மூலம் நல்ல கட்டுரைகளும் சமுதாயத்துக்கு செய்தியை சென்று சேர்க்க கதை, குறும்படங்களும் கிடைக்கும். பாராட்டுகள்.
ReplyDeleteநல்ல முயற்சி..நிறைய பேர் கலந்துக்கொண்டு தங்களை ஆக்கங்களை எண்ணங்களாக மாற்றும் நடவடிக்கை..பாராட்டுக்கள் நேசம் குழுவினருக்கு....
ReplyDeleteTogether let's bring the change
ReplyDeleteநல்ல முயற்சி. பாராட்டுகள்.
ReplyDeleteநேசம் அமைப்பின் இந்த முயற்சிக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
ReplyDeleteHats off...........மிகத் தேவையான ஒரு ஆரம்பம்....வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநல்லதொரு போட்டி.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி.
ReplyDeleteநான் ஏற்கனவே மார்பக புற்று நோய் பற்றிய கட்டுரையின் இணைப்பை அனுப்பி வைக்கிறேன்.
உங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்.
நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களின் பெயர் அழகாக உள்ளது
Deleteநயத்துடன் ஒரு கவிதை
அழகு!
வாழ்த்துகள்.
ReplyDeleteமனித நேயமிக்க வருமுன் காத்தல் என்னும் விழிப்புணர்வை தரும் போட்டிக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள்..
ReplyDeleteஎல்லோருக்கும் தேவையான அருமையான் விழிப்புணர்வு போட்டி,
ReplyDeleteவாழ்த்துக்கள்,
வாழ்த்துகள்!
ReplyDeleteநேசம் அமைப்பின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletegreat . keep going
ReplyDeleteசில சந்தேகங்கள்:
ReplyDelete1. ஒருவர் குறைந்த பட்சம் எத்தனை படைப்புகள் அனுப்பி வைக்கலாம்? ஒன்றுதான் இணைக்கவேண்டுமா?
2. அனுப்பும் படைப்பு, இப்பொழுது புதியதாக எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டுமா அல்லது சிலகாலம் (2 ஆண்டுகள்) முன்பு வலைப்பூவில் பதியப்பட்டதாகவும் இருக்கலாமா? அதை மீள்பதிவு செய்து இணைக்கலாமா?
பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
Innovative awareness initiative... great
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல முயற்சிகளுக்கு எனறும் நல்ல வரவேற்பு உண்டு.இந்த போட்டியின் முடிவுகளுக்காக காத்திருப்பேன்.நன்றி!!!
ReplyDelete